×

கொரோனா தொற்று காலத்தில் மாநகராட்சி டெலி கவுன்சிலிங் மையம் மூலம் 11.90 லட்சம் பேருக்கு ஆலோசனை: நோயாளி 9 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்ப்பு

சென்னை: கொரோனா தொற்று காலத்தில் சென்னை மாநகராட்சி டெலி கவுன்சிலிங் மையம் மூலம் 10.90 லட்சம் பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு மன நல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 100 தொலைபேசி அழைப்புகளுடன் கூடிய தொலைபேசி ஆலோசனை மையம் (டெலி கவுன்சிலிங்) கடந்த மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்நிலையில் 11.90 லட்சம் பேர் இந்த மையம் மூலம் ஆலோசனைகளை பெற்றுள்ளனர்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது தொடர்பாக தொலைபேசி ஆலோசனை மையத்தின் மாவட்ட திட்ட அலுவலர் (சுகாதாரம்) டாக்டர் பிரதீப் செல்வராஜ் கூறியதாவது: தொலைபேசி அழைப்பு மையம் மார்ச் 25ம் தேதி தொடங்கப்பட்டது. மருத்துவர்கள், 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள், மன மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த மையத்தில் உள்ளார்கள். மையத்தை தொடர்பு கொள்பவரிடம் உடல்நிலை தொடர்பான அனைத்து தகவல்களும் கேட்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்வது, மருத்துவமனையில் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த காரணத்தால் தொற்று பரவுதல் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பலர் மன அழுத்தத்தில் இருப்பார்கள். தற்கொலை எண்ணம் தொடர்பான அழைப்புகள் கூட வந்துள்ளன. இவர்கள் பயிற்சி பெற்ற மன நல ஆலோசகர்கள் ஆலோசனை வழங்குவார்கள். ஒரு சிலருக்கு மன ஆலோசனை மையத்தில் அனுமதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. மருத்துவமனை சென்று சிகிச்சை  எடுக்க முடியாத நபர்களுக்கு மருத்துவர்கள் வீடியோ கால் மூலம் ஜிசிசி விட்மெட் செயலி மூலம் ஆலோசனை வழங்கிவருகின்றனர்.

இங்கு 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனை மற்றும் கோவிட் கேர் மையங்களில் சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் அதிதீவிர கொரோனா பாதிப்பு கொண்ட ஒரு கொண்ட ஒருவரை தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். 19 கிலோ மீட்டர் தூரத்தை 9 நிமிடத்தில் கடந்து 108 ஆம்புலன்ஸ் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்து நலமுடன் உள்ளார். உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுவர்கள் உடனடியாக இந்த மையத்தின் 044 - 46122300, 25384520 என்ற எண் அல்லது மண்டல வாரியாக எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Corporation Tele Counseling Center ,hospital ,Patient ,Corona , Corona Infection, Corporation Tele Counseling Center, Consulting
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...