தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி வசதியை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் ஏசி வசதியை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுளை மாநில மற்றும் மத்திய அரசு கடந்த சில மாதங்களாக விதித்து வந்தது. தற்போது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி வசதியை பயன்படுத்தி கொள்லாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுளை தமிழக அரசு அறிவித்தது.

இருப்பினும் உணவகங்களில் ஏசி பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி மறுத்து வந்தது. இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் படி உணவகங்களில் ஏசி வசதியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும் வாடிக்ககையாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிக்க வேண்டியது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>