×

செப்டம்பர் இறுதிக்குள் மொத்த கொரோனா தொற்றுநோய்களின் பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சத்தைத் தொட்டுவிடும்: ப.சிதம்பரம் ட்வீட்

புதுடெல்லி: செப்டம்பர் இறுதிக்குள் மொத்த கொரோனா தொற்றுநோய்களின் பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சத்தைத் தொட்டுவிடும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்தது. ஒரே நாளில் மிக அதிகமாக 86,432 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து  தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், செப்டம்பர் 30க்குள் மொத்த தொற்றுநோய்களின் பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தை எட்டும் என்று நான் கணித்திருந்தேன். நான் கணித்தது தவறு. செப்டம்பர் 20க்குள் இந்தியா அந்த எண்ணிக்கையை எட்டும். செப்டம்பர் இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 65 லட்சத்தைத் தொட்டுவிடும்.

இவ்வளவு லாக்டவுன்கள் மேற்கொண்டு அதன் பலன்களை அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியா என்று தோன்றுகிறது. 21 நாட்களில் கொரோனா வைரஸை தோற்கடிப்போம் என்று உறுதியளித்த பிரதமர் மோடி, மற்ற நாடுகள் கொரோனா விஷயத்தில் வெற்றி பெற்று வரும் நிலையில் இந்தியா ஏன் தோல்வியடைந்தது என்பதை விளக்க வேண்டும், என கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், பொருளாதார நிலையை விமர்சித்துள்ளார். அதில், 2020-21 நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரம் சரிவு கண்டதற்கு விளக்க ஒரு வார்த்தை கூட இல்லை. ஆனால் மக்களை திசைத்திருப்பும் பழைய வேலையைச் செய்து வருகிறது அதாவது V-வடிவத்தில் பொருளாதார மீட்பு இருக்கும் என்கிறது, என்று விமர்சித்துள்ளார்.

Tags : P. Chidambaram , Corona, Curfew, Modi, P. Chidambaram
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...