×

காரமடை அருகே அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு வீட்டிற்கே சென்ற கல்வி அதிகாரி

மேட்டுப்பாளையம்:   காரமடை ஒன்றியத்தில் 123 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. லிங்காபுரம் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி காரமடையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள காந்தவயல்,  உலியூர் ஆகிய கிராமங்களில் பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு பவானி நீர்த்தேக்க பகுதியில் நீர் அதிகமாக இருப்பதாலும், கொேரானா தொற்று காரணமாகவும் மாணவர்கள் பள்ளிக்கு வர  இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. காந்தவயல், உலியூர் ஆகிய  கிராமங்களில் உள்ள மாணவர்கள் நலன் கருதி கடந்த செப். 3, 4ம் ஆகிய தேதிகளில் காரமடை வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் பாபு மற்றும்  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்கள் வீடுகளுக்கே சென்று சேர்க்கை பணியில் ஈடுபட்டனர். இதில் 6ம் வகுப்பில் குணா, ஆனந்த், பூபதி, குமார், சீதா ரீனா, நதியா ஆகிய 7 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இம்மாணவர்களுக்கு நோட்டு  புத்தகங்கள், புத்தகப்பை வழங்கப்பட்டு பாடம் நடத்த வீட்டிற்கே செல்வது குறித்து ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Education officer ,government school students ,home ,Karamadai ,officer ,Karamadai Education , Karamadai, Education , home , admission , government, school, students
× RELATED மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீத...