×

வங்கதேசத்தில் உள்ள ஒரு மசூதியில் எரிவாயு கசிந்து வெடி விபத்து...: ஒரு குழந்தை உள்பட 12 பேர் பலி!

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள ஒரு மசூதியில் எரிவாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதில், ஒரு குழந்தை உள்பட 12 பேர் பலியாகியுள்ளானர். வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் நாராயங்கஞ்ச் நதி துறைமுக பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குளிர்சாதனம் வெடித்துள்ளது. இதுகுறித்து பேசிய வங்கதேச போலீஸார் சனிக்கிழமை கூறும்போது,  வங்கதேசத்தின் மத்தியப் பகுதி நகரமான நாராயன்கன்ஜியில் உள்ள மசூதியில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் மசூதியில் பரவிய தீ, அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பரவியது. இதில் 12 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய நாராயங்கஞ்ச் தீயணைப்பு துறை அதிகாரி அப்துல்லா அல் அரேஃபின் டாக்கா ட்ரிப்யூன், மசூதிக்கு அடியில் டைட்டாஸ் வாயுவின் குழாய் செல்கிறது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் குழாயில் இருந்து கசிந்த வாயுவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். அப்போது குளிர்சாதனத்தை யாரேனும் அணைக்கவோ இயக்கவோ செய்யும் போது விபத்து நடந்திருக்கலாம் என கூறியுள்ளார். மேலும், விபத்து குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : Gas leak ,mosque ,Bangladesh , Bangladesh, Dhaka, Mosque, Explosion, Kills
× RELATED ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் பூஜை...