×

சேர்ந்தமரம் அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் மக்கள் அவதி: பைப்லைன் உடைப்பால் குடிநீர் விநியோகம் பாதிப்பு

சுரண்டை: சேர்ந்தமரம் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக  அவதிப்படுகின்றனர். மேலும் பைப்லைன் உடைப்பால் குடிநீர் விநியோகமும் தடைபட்டுள்ளது. சங்கரன்கோவில் தாலுகா, மேலநீலிதநல்லூர் ஒன்றியம், பட்டாடைகட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுவக்குறிச்சியிலிருந்து வென்றிலிங்கபுரம் வழியாக  ஈச்சந்தா வரை புதிய தார்சாலை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து போட்டுள்ளனர். இந்த சாலை அமைப்பதற்காக குடிநீர்  பைப்புகளின் இணைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த சாலையோர பகுதி  பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலை பெயர்த்து ேபாடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இரு சக்கர  வாகனத்தில் கூட செல்ல முடியாமல் அடிக்கடி விபத்தில் சிக்க நேரிடுகிறது. அவசர மருத்துவ தேவைக்காக கூட இந்த சாலையை பயன்படுத்த  முடியாத சூழ்நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.எனவே நடுவக்குறிச்சியிலிருந்து வென்றிலிங்கபுரம் வழியாக ஈச்சந்தா செல்லும் சாலையை  உடனடியாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Chernthamaram ,road , Chernthamaram, Laid, road,work, breakage
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி