×

வேலூரில் வெயில், மழையை தொடர்ந்து அதிகாலையில் திடீர் பனிப்பொழிவு: மாறுபட்ட சீதோஷணங்களால் மக்கள் மகிழ்ச்சி

வேலூர்: வேலூரில் வெயில், மழையை தொடர்ந்து நேற்று அதிகாலையில் பனிப்பொழிவு காணப்பட்டது.வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் அவ்வப்போது மாலையில் திடீரென மழையும் பெய்து வருகிறது.  இதேபோல் நேற்று முன்தினம் காலை வேலூரில் 91 டிகிரி வரை வெயில் பதிவானது. தொடர்ந்து மாலையில் திடீரென மழை பெய்தது. சுமார் 1 மணி  நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது.மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகப்பட்சமாக பொன்னையில் 34.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. வேலூரில் 17.5 மி.மீ, குடியாத்தத்தில் 7  மி.மீ, காட்பாடியில் 2.4 மி.மீ, மேல் ஆலத்தூரில் 6.4 மி.மீ, திருவலத்தில் 12.2 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் மொத்தமாக 70.10 மி.மீ  மழையும், சராசரியாக 11.68 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை வேலூரில் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், அதிகாலையில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. வேலூரில்  பகலில் வெயில் சுட்டெரித்தாலும், மாலையில் மழையும், அதிகாலையில் பனிப்பொழிவும் என மாறுபட்ட சீதோஷண நிலைகள் காணப்படுகிறது.அதேபோல் அவ்வப்போது மழை பெய்வதால் மானாவரி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மழைநீரை தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கழிவுநீர் கால்வாய்களில் ஓடி வீணானது. இதனால் சமூக  ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேபோல் பெரும்பாலான சாலைகளில் பாதாள சாக்கடை உள்ளிட்டவற்றுக்காக பள்ளம் தோண்டப்பட்டு சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே சாலைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Vellore ,snowfall , Sudden, snowfall, Vellore , happy ,different ,climates
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை