×

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசுப் பள்ளிகளில் தற்காலிகப் பணி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: வேலையில்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசுப் பள்ளிகளில் தற்காலிகப் பணி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பதற்கு குறைந்தளவில் ஆசிரியர்கள் போதும் என்பதால், பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதே போல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வேலையில்லாமல் இருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பள்ளியில் தற்காலிக பணி தரப்படும். தமிழக அரசு பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். தொடர்ந்து, சம்பளம் வழங்காதது பற்றி தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் அரசு பரிசீலிக்கும். மேலும், கேராளாவில் பள்ளிகள் திறந்தாலும், தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளைத் திறக்க முடியாது. பள்ளியை திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று, அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Private school teachers ,government schools ,Minister Senkottayan , Private School, Teachers, Government School, Temporary Work, Minister Senkottayan
× RELATED தென்னை சார்ந்த தொழிலை அரசு ஊக்கப்படுத்தினால் வேலை வாய்ப்பு ெபருகும்