×

நாடு முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: காணொலி காட்சி மூலம் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கவுரவிப்பு.!!!

டெல்லி: நாடு முழுவதும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் விருது வழங்கினார். ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும்  செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அணடு நாடு முழுவதும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களின்  பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற  விழாவில் காணொலி காட்சி மூலம் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார். விருது வழங்கப்பட்ட 47 ஆசிரியர்களில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட 47 ஆசிரியர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதிக்கும், விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு  மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப்புக்கும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதனைபோல், புதுச்சேரியை சேர்ந்த முத்துக்குமரன் ராஜகுமாரனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.


Tags : Ramnath ,teachers ,country , National Author Award for 47 teachers across the country: President Ramnath honored by presenting the video. !!!
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்