×

PUB-Gக்கு பதில் இந்தியாவில் வெளியாகிறது FAU-G : அக்டோபரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி; வருவாயில் 20% 'பாரத் கே வீர்'அமைப்புக்கு நன்கொடை!!

டெல்லி : சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை முடக்கி வைத்திருந்த பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஈடாக புதிய விளையாட்டு ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. கல்வான் மோதலையடுத்து சீன தயாரிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இளைஞர்களின் விருப்ப விளையாட்டான ‘பப்ஜி’ உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடை விதித்தது. இந்த செயலிகள் மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு பாதிக்கப்படுவதாகவும், இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பப்ஜி செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக புதிய செயலி ஒன்று வெளியாகவுள்ளது. மத்திய அரசின் ஆத்மநிர்பார் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட இருக்கும் இந்த செல்போன் விளையாட்டிற்கு FAU-G எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள், நாட்டுக்குள் ஊடுருவும் எதிரிகளை போரிட்டு வீழ்த்துவது போல் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் ஆகியோரின் ஆலோசனைகளின் அடிப்படையில் தயாரான இந்த FAU-G விளையாட்டுவை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அக்ஷய் குமார், இந்த ஆப் மூலம் கிடைக்கும் வருவாயில் 20% பாரத் கே வீர் என்ற தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறி இருக்கிறார். தேசத்தை பாதுகாக்கும் பணியில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக இந்த நிதி பயன்படுத்த உள்ளது. இந்த ஆப் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Tags : organization ,India ,FAU-G , For PUB-G, India, Released, FAU-G, October, Federal Government, Bharat K Veer, Donation
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...