×

ரூ26 லட்சத்தில் பழவேற்காட்டில் நலத்திட்ட பணிகள் தொடக்கம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேற்காடு, கோட்டைக் குப்பம், லைட் ஹவுஸ் ஊராட்சிளுக்கு ரூ26 லட்சம் மதிப்பிலான சாலை மற்றும் உயர்கோபுர விளக்குகள் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.
ரூ17 லட்சம் மதிப்பீட்டில் கோட்டைக் குப்பம் ஊராட்சியில் பேவர் பிளாக் ரோடு அடிக்கல் நாட்டு விழாவும், லைட் ஹவுஸ் ஊராட்சி திருமலை நகர்,ப ழவேற்காடு மீன் மார்க்கெட் மற்றும் குளத்துமேடு, தோணிரேவு இணைப்பு சாலையிலும் தலா 3 லட்சம் மதிப்பிலான உயர்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது.

மீஞ்சூர் ஊராட்சிக்குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அமைப்பாளர் முகம்மது அலவி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் சுகுமாரன், வல்லூர், ரமேஷ்ராஜ் ஆகியோர் வழங்கினர். மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement , Fruit forest, welfare works, start
× RELATED சபரிமலை சீசன் தொடக்கம்...