×

பால் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ10 லட்சம் மானியம்: கலெக்டர் தகவல்

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டத்தில் பால் பதப்படுத்தும் சிறு நிறுவனத்தை தொடங்குபவர்கள், ஏற்கனவே உள்ள சிறு நிறுவனத்தை மேம்படுத்த ₹10 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது, பிரதமரால் 2020-21ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பாரத பிரதமர் உணவுபதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2020-21ம் ஆண்டு முதல் 2024-25 வரை ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு  உணவுப் பதப்படுத்தும்  நிறுவனங்கள் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம்  அல்லது அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது.  வர்த்தக  முத்திரை  மற்றும்  சந்தைப்படுத்தலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 


Tags : milk processing companies , Milk Processing Small Company, Grant, Collector
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...