×

காஞ்சிபுரத்தில் பழைய குற்றவாளிகள் 87 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் 87 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதில், 74 பேரிடம் நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு விடுவிக்கபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 87 பேரை கைது செய்ய எஸ்பி சண்முகப்பிரியா தலைமையில் 6  ரவுடி ஒழிப்பு தனிப்படை புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், கடந்த ஒரு மாதத்தில் பிரபல ரவுடிகளான அருண்குமார், காதர், விக்னேஷ், முருகன், கூகுள் ஆகியோரை கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த 84 பேரையும் கைது செய்தனர். இதையொட்டி, கடந்த 3 நாட்களில் 74 ரவுடிகள் இனி, எவ்வித குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என காஞ்சிபுரம் மற்றும் பெரும்புதூர் ஆர்டிஓ முன்பாக நன்னடத்தை பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர் என எஸ்பி சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.

Tags : Kanchipuram. ,Kanchipuram , Kanchipuram, old criminals, arrested
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில்...