×

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு எழுத முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத செல்பவர்களுக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவை-சென்னை சென்ட்ரல் (ரயில் எண் 06101) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று (சனி) இரவு 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, எம்.சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 06102) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயயில் நாளை (ஞாயிறு) இரவு 9 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு கோவை வந்தடையும்.

 நெல்லை- மதுரை (ரயில் எண் 06103) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை அதிகாலை 5.15 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு காலை 8 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக மதுரை-நெல்லை (ரயில் எண் 06104) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் மதுரையில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு நெல்லை சென்றடையும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Unreserved Special Trains Movement , National Defense Academy Examination, Special Trains, Southern Railway
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...