×

சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல்

சென்னை: பூந்தமல்லி தனி கிளை சிறையில் 100க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் ஒருசில கைதிகள் செல்போன் வைத்திருப்பதாக சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் சிறையில் உள்ள ஒவ்வொரு அறையிலும் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, ஆதம்பாக்கத்தை சேர்ந்த  ஜான் (எ) ஆனந்தன் என்பவரிடமிருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.  இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 6ம் தேதி முதல் இங்கு அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.Tags : Prisoner, cell phone confiscated
× RELATED செல்போனை தாய் பறித்ததால் சிறுவன்...