×

சிபிஎஸ்இ மறுதேர்வு தேதி அறிவிப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கான மறுதேர்வுகள் செப்டம்பர் 22 முதல் 29 வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக சிபிஎஸ்இ மறுதேர்வு நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த சிபிஎஸ்இ நிர்வாகம், மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனேயே தேர்வு நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 10ம் தேதிக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது சிபிஎஸ்இ.

சிபிஎஸ்இ தேர்வு அதிகாரி சான்யம் பரத்வாஜ் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘‘சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கான மறுதேர்வு வரும் 22 முதல் 29ம் தேதி வரை நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்கள் மறுதேர்வில் பங்கேற்கலாம்’’ என கூறப்பட்டுள்ளது.

Tags : CBSE ,date announcement , CBSE Re-selection, Date Notice
× RELATED நடப்பாண்டில் சி.பி.எஸ்.இ. 10, 12...