×

யானை வழித்தடம் தொடர்பாக விரிவான விசாரணை வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் யானை வழித்தட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 39 ரிசார்ட்டுகள் இடிக்கப்பட்டது. இதையடுத்து சீலிடப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் இயங்குகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில், தனி குழு உருவாக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு மேற்கண்ட குழு ஆய்வுகளை அதுதொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வாதங்கள் நடைபெற இருந்த நிலையில், அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘யானை வழித்தடம் தொடர்பான வழக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமில்லாமல், இதுபோன்ற பிரச்சனை நாடு முழுவதிலும் உள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் ராஜாஜி தேசிய பூங்கா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இதுதொடர்பாக வாதங்களை முன்வைக்க யாரும் ஆஜராகவில்லை’’ என தெரிவித்த நீதிபதி வழக்கை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Tags : Supreme Court , Elephant Route, Trial, Supreme Court
× RELATED லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான...