×

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும்: நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

நாகர்கோவில்: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில், ‘நான் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும்’ என்று நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் சில நாட்களுக்கு முன்பு மறைந்தார். இந்த தொகுதியில் பாஜ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வசந்த்குமார் எம்.பி.யிடம் தோற்றார். இந்தநிலையில், நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சரும், தென் மண்டல பா.ஜ.க. பொறுப்பாளருமான நயினார், ‘கட்சிதலைமை அனுமதித்தால் கன்னியாகுமரியில் போட்டியிடுவேன்’ என்று தெரிவித்தார்.

இந்த பேச்சு, பா.ஜ.கவில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவரது கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று பதில் அளித்துள்ளார். இதுபற்றி, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைதேர்தல், சட்டமன்ற தேர்தலுடனும் வரலாம். அல்லது 6 மாதத்திற்குள்ளாகவும் தேர்தல் வரலாம். நவம்பர் மாதம் பீகாரில் நடக்கும் தேர்தலுடனும் நடக்கலாம். இதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். ஆனால், கன்னியாகுமரி இடைதேர்தலில் வசந்குமாரின் மகன் போட்டியிடுவது, அவருக்கு அனுதாப அலை உள்ளது என கூறுவது தவறு.

அனுதாபம் என்பது 7 நாட்களுடன் முடிந்து விடும். நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரியில் போட்டியிடுவதில் எந்த தப்பும் இல்லை. நான் போட்டியிடுவது பற்றி கட்சி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Nayyar Nagendran ,Kanyakumari ,constituency ,Pon.Radhakrishnan , Kanyakumari Parliamentary Constituency, Party Leadership, Pon.Radhakrishnan
× RELATED விளவங்கோடு இடைத்தேர்தல் பெண்களே மோதுகின்றனர்