×

ரஷ்யாவின் தடுப்பூசி பாதுகாப்பானது

மாஸ்கோ: கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். தனது மகளுக்கு தடுப்பூசி கொடுத்து பரிசோதிக்கப்பட்டதாகவும், உலகின் முதல் தடுப்பூசி என்று பதிவு செய்திருப்பதாகவும் கூறினார். ஆனால், இதுபற்றி கருத்து தெரிவித்த மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர். ரஷ்யா அவசரம் காட்டுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர். உலக சுகாதார நிறுவனமும் இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில் லான்செட் மருத்துவ இதழானது ஸ்புட்னிக் - வி தடுப்பூசி பாதுகாப்பானது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது.

மனிதர்களிடம் கொடுத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஆன்டிபாடிகளை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. இதுபற்றி லான்செட் வெளியிட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரையில், தடுப்பூசி அளிக்கப்பட்ட 21 நாட்களிலேயே எதிர்ப்பு சக்தி தரும் ஆன்டிபாடிகள் உருவாவதாகவும், நோய் எதிர்ப்பு மண்டலத்திலுள்ள டி செல்களும் 28 நாட்களில் உருவானதாகவும் கூறப்பட்டுள்ளது. 42 நாட்களில் நோயாளிகளுக்குப் பக்கவிளைவுகளும் எதுவும் ஏற்படவில்லை. முக்கியமாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதுடன், கொரோனா வைரஸையும் தாக்கி அழித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

Tags : Russia , Russia is vaccinated and safe
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...