×

ஏற்கனவே 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக மேலும் 4 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு வரும் 7ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதையடுத்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  கோரிக்கையை ஏற்று, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு 9 சிறப்பு ரயில்கள் எந்த நேரங்களில், எத்தனை நாட்கள் இயக்கப்படும், டிக்கெட் முன்பதிவு எப்போது நடைபெறும் என்று அறிவித்தது.டிக்கெட் முன்பதிவும் இன்று முதல் தொடங்கிறது.  

இந்நிலையில் தற்போது தெற்கு ரெயில்வே மேலும் கூடுதலாக 4 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர்-செங்கோட்டை (ரயில் எண் 06181) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 10ம் தேதி முதல் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டை-எழும்பூர் (ரயில் எண் 06182) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் 11ம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

எழும்பூர்-கன்னியாகுமரி (ரயில் எண் 02633) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 8ம் தேதி  மாலை 5.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரி-எழும்பூர் (ரயில் எண் 02634) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 9ம் தேதி மாலை 5.05 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும். சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் (ரயில் எண் 02671) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 7ம் தேதி இரவு 9.05 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம்-சென்ட்ரல் (ரயில் எண் 02672) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 8ம் தேதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு கோவை வந்தடையும். திருச்சி-நாகர்கோவில் (ரயில் எண் 02627) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 7ம் தேதி காலை 6 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவில்-திருச்சி (ரயில் எண் 02628) இடையே பிற்பகல் 3 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். இந்த  ரயிலுக்கான முன்பு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.


Tags : Southern Railway ,announcement , Special trains, Southern Railway
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...