பாஜ கூட்டணியில்தான் அதிமுக உள்ளது: அமைச்சர்களுக்கு எச்.ராஜா எச்சரிக்கை

மதுரை: பாஜ கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. டெல்லிக்கு மட்டுமல்ல. தமிழகத்திலும் பாஜக ராஜாதான் என அமைச்சர்களுக்கு பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை, கருப்பாயூரணி பகுதியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலுக்காகவும் தற்கொலை நடக்கிறது.

இதற்காக காதலை தடை செய்ய முடியுமா? ரஜினி ஆளுமையான ஆள் என்பதால், அவர் பாஜகவில் சேருவது குறித்து நான் கருத்துக்கூற முடியாது. பாஜ கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. பாஜ டெல்லிக்கு ராஜா மட்டுமல்ல. தமிழகத்திலும் ராஜாதான் என அமைச்சர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>