×

மதுரை மஸ்தான்பட்டி காய்கறி மார்க்கெட் மூடல்: மீண்டும் திறக்க கோரிக்கை

மதுரை: மதுரை மஸ்தான்பட்டி காய்கறி மார்க்கெட் நேற்று திடீரென மூடப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் 450 காய்கறி கடைகள் உள்ளது.  கொரோனா காரணமாக இங்கு செயல்பட்டு வந்த கடைகள் மாநகராட்சிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் சாலை, சர்வேயர் காலனி 120 அடி ரோடு மற்றும் ரிங்ரோடு மஸ்தான்பட்டி அம்மா திடல் போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் அதிகமான மக்கள் கூடுவதை தடுக்கும் விதமாக சென்ட்ரல் மார்க்கெட் காய்கறிகடைகள் பிரித்து தனி தனியாக அமைக்கப்பட்டு இருக்கிறது.  மேலும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மார்க்கெட் பகுதியில் பொதுபோக்குவரத்துக்கு  இடையூறு இல்லாத இடமாக உள்ளது. இந்த நிலையில், மஸ்தான்பட்டி மார்க்கெட் நேற்று முதல் திடீரென மூடப்பட்டது.

இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனாவின் தாக்ககும் முற்றிலும் குறையும் வரை மஸ்தான்பட்டி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘சென்ட்ரல் மார்க்கெட் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கினால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளளவில் வர வாய்ப்பு உள்ளது. இதனால் மதுரையில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகும். கொரோனாவை தடுக்க தற்காலிக மார்க்கெட் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட அதே பகுதியில் நடத்த வேண்டும்,’’ என்றனர்.

Tags : Madurai Mastanpatti , Madurai, Mastanpatti vegetable market closed
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...