×

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறுதேர்வுக்கான அட்டவணை வெளியீடு

டெல்லி: 10, 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 29 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும், குறிப்பிட்ட சில பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்று முன்னேற்றத் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதம் மறுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

இந்த மறுத்தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தலைமையிலான அமர்வு, மறுதேர்வு நடத்தும் விவகாரத்தில் வரும் 7-ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் 10, 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 29 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

1,278 மையங்களில் தேர்வு நடைபெறும் என்றும், ஒரு தேர்வறையில் 12 மாணவர்களுக்கு பதில் 10 மாணவர்கள் அமர வைக்கப்படுவார்கள் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிதல், சானிடைசர், தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Tags : CBSE , CBSE, re-exam
× RELATED சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 20ம் தேதிக்கு பிறகு வெளியாகும்?