×

டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டண செலுத்துதலை பாஸ்டேக் மூலம் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

டெல்லி: டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டண செலுத்துதலை பாஸ்டேக் மூலம் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2017 டிசம்பருக்கு முன்னால் விற்கப்பட்ட வாகனங்களுக்கு பாஸ்டேக்கை கட்டாயமாக்குவது குறித்து பங்குதாரர்களிடம் இருந்து கருத்துகளையும் ஆலோசனைகளையும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வரவேற்றிருந்தது.

மேலும் புதிய மூன்றாம் நபர் காப்பீட்டை எடுக்கும் போது செல்லத்தக்க பாஸ்டேக்கை கட்டாயமாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய வாகனங்கள் பதிவு அல்லது வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் போது பாஸ்டேக் விவரங்களை உறுதி செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிகளைக் கடக்கும் போது மின்னணு ஊடகம் மூலம் பாஸ்டேக் கட்டணத்தை உறுதி செய்வதற்காக பாஸ்டேக் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் ரொக்க வசூலைத் தவிர்க்கலாம். பாஸ்டேக் பயன்பாடு காரணமாக தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கொரோனா பரவும் வாய்ப்புகள் குறைகிறது.



Tags : fastag, Digital and Information Technology
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...