×

பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் குறைவான அரசு பஸ்களால் பொதுமக்கள் கொரோனா பாதிப்பு அச்சமடைந்துள்ளனர். காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்கியதால் பொள்ளாச்சியிலிருந்து 90 அரசு பஸ்கள் கோவை மற்றும் வால்பாறை, சுற்று வட்டார கிராம பகுதிக்கு மட்டும் இயக்கப்படுகின்றன. இதில் சில பஸ்களில் சமூக இடைவெளி விட்டு, அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கும், கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கும் இயக்கப்படும் அரசு பஸ்களில் சமூக இடைவெளியில்லாமல் இருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்கள், பல்வேறு நிறுவனங்களுக்கு பணி நிமித்தமாக சென்று வரும் ஊழியர்கள் காலை மற்றும் மாலை நேரத்திலே அதிகம் பயணிக்கின்றனர்.

ஆனால், அந்நேரத்தில் 30 நிமிடத்திற்கு ஒரு முறை என குறைவான பஸ்களே இயக்கப்படுவதுடன், வழக்கம்போல் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி செல்வது தொடர்ந்துள்ளது. இதில் நேற்று ஒரு சில பஸ்களில் வழக்கம்போல் கூட்டம் இருந்ததுடன், படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் அளவிற்கு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். கொரோனா பரவல் வேகம் எடுக்கும் இந்நேரத்தில், அரசு பஸ்களில் எந்தவித கட்டுப்பாடு இல்லாமலும், சமூக இடைவெளி இல்லாமலும் கூட்டமாக பயணிகளை இயக்கி செல்வதால், அதில் பயணம் செய்பவர்கள் மட்டுமின்றி அதனை பார்ப்பவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது, அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கும், கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கும் சென்று வரும் பயணிகள் வசதிக்காக, சமூக இடைவெளியை முறையாக கடை பிடிக்கும் வகையில் கூடுதல் பஸ் இயக்க, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Pollachi ,Coimbatore ,bus operation , Pollachi ,Coimbatore, Request ,additional ,operation
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!