×

கிழக்கு புறவழிச்சாலை வளைவுகளில் தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி அருகே கிழக்கு புறவழிச்சாலை பகுதி அபாயகரமான வளைவுகளில் தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். பொள்ளாச்சி கிழக்கு புறவழிச்சாலையில் ஆலாம்பாளையம், குள்ளக்காபாளையம் உள்ளிட்ட கிராமத்தை தொட்டுள்ள புறவழிச்சாலையில் அபாயகரமான இடத்தில் தடுப்பு, எச்சரிக்கை பலகையே அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிலும், ஆலாம்பாளையம் கிராமத்தில் தடுப்பணைக்கு மேல் பகுதியில் செல்லும் பாலத்தை தொட்டுள்ள வழித்தடத்தில் தடுப்புகள் இல்லாமல், சுமார் 40 அடிக்கு பள்ளமான பகுதியாக அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
 
வளைவுகள் உள்ளிட்ட அபாயகரமான இடத்தில் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பெரிய அளவில் விபரீத சம்பவம் ஏற்படுவதற்குள், உறுதியான தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : Accident ,risk, barriers,east ,bypass ,curves
× RELATED சிவகாசி அருகே தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம்