திருப்பூர் மாநகராட்சியில் ரூ.39.73 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் ‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டத்தின்கீழ் இடுவாய் கிராமத்தில் 26 ஏக்கர் பரப்பளவில் 4.5 மெகாவாட்டும், மற்றொரு இடத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் 2 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் ரூ.39 கோடியே 73 லட்சத்தில் இந்த மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக ஆண்டுக்கு 11 ஆயிரத்து 200 மெகாவாட் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஆய்வின்போது, செயற்பொறியாளர் முகமது சபியுல்லா, 4-வது மண்டல உதவி ஆணையர் கண்ணன், உதவி  பொறியாளர் ராம்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>