×

கஜா புயலால் வீடு இழந்த பெண்ணுக்கு புதிய வீடு கட்டி தந்த இளைஞர்கள்: காரைக்குடியில் மனிதநேயம்

காரைக்குடி: கஜா புயலால் சேதமடைந்த வீட்டில் ஒரு வருடத்துக்கு மேலாக வாழ்ந்த பெண்ணுக்கு இளைஞர்கள் புதிய வீடு கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளனர்.காரைக்குடி காளவாய்பொட்டல் வாணியங்காளி கோவில் பகுதியை சேர்ந்தவர் வேணி. கணவர் விட்டு சென்றதால் 2 குழந்தைகளுடன் சந்தையில் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வீசிய கஜா புயலால் இவரது வீடு முற்றிலும் நாசமானது. வறுமை காரணமாக உடைந்த வீட்டிலேயே தார்ப்பாய் அமைத்து வாழ்ந்து வந்தார். அரசிடம் மனு கொடுத்தும் அனுபவ பத்திரம் என்பதால் புதிய வீடு கட்டிதர முடியாது என கைவிரித்துவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தோள்கொடு தோழா அமைப்பின் இளைஞர்கள் வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதியில் பணியாற்றும் நண்பர்களிடம் நன்கொடை வசூல் செய்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கு வீடு கட்டி கொடுத்துள்ளனர்.தோள்கொடு தோழா அமைப்பு நிர்வாகி நசீர் கூறுகையில், வீடு உடைந்து மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து வருவது குறித்து நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்தது. வாட்ஸ் அப் மூலம் நண்பர்களுக்கு தகவல் தரப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் பணியாற்றும் நண்பர்கள் மூலம் நன்கொடை வசூல் செய்து 300 சதுர அடியில் ஹாலோ பிளாக் மூலம் 3 மாதத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளோம் என்றார்.

Tags : Youths ,house ,storm ,Humanity ,Karaikudi , Youths ,built, woman ,lost,Gajah ,storm, Karaikudi
× RELATED 300 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி: ட்ரோன் உதவியுடன் மீட்பு