×

திண்டிவனத்தில் ஒரே பதிவு எண் கொண்ட 6 கனரக வாகனங்கள் பறிமுதல்

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஒரே பதிவு எண்ணை பயன்படுத்தி இயக்கப்பட்ட 6 கனரக வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேட்டில் நுகர்பொருள் வாணிப கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நுகர்பொருள் வாணிப கிடங்கில் பல ஆண்டுகளாக பதிவு எண் இல்லாமலும், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகம் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமலும் பல்வேறு கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரோஷனை ேபாலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பதிவு எண் கொண்ட 3 லாரிகள் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரே பதிவு எண்ணில் 2 லாரிகளும், மற்றொரு வாகனம் எந்தவித ஆவணங்களும் இல்லாமலும் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 6 வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக திண்டிவனம், முருங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த கவுசர் பாஷா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் சந்தைமேட்டில் செயல்பட்டு வரும் நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து ரேஷன் கடைகள், அங்கன்வாடி, பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்வதற்கும், வாணிப கிடங்குக்கு லோடு ஏற்றி வரவும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமலும் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய்யை எரிபொருளாக பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் திருடப்பட்டு வாகனங்களுக்கு பயன்படுத்த அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



Tags : Tindivanam , Seizure ,6 heavy ,vehicles ,single ,registration ,number ,Tindivanam
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...