×

நகர பேருந்துகளிலும் வசூல் அதிகரிப்பு புறநகர் பஸ்களை இயக்க ஆயத்தமாகும் அரசு போக்குவரத்து கழகம்

நாகர்கோவில்:  கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து அரசு பஸ்கள் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வருகிற 7ம் தேதி முதல் புறநகர் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஆயத்தம் ஆகிவருகிறது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ்கள் இயக்கம், கடந்த 1ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக மாவட்டங்களுக்குள் மட்டும் பஸ் போக்குவரத்து நடக்கிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 520 டவுன் பஸ்களில், முதல் நாளான 1ம் தேதி 253 பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் நாள் பயணிகளின் கூட்டம் மிக குறைவாகவே இருந்தன. பயணிகள் முக கவசம் அணிந்து ெகாள்ளுமாறு டிரைவர், கண்டக்டர்கள் வலியுறுத்தினர். டிரைவர், கண்டக்டர்களும் முக கவசம் அணிந்து இருந்தனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனையும் நடத்தப்பட்டது.  

 மாவட்டங்களுக்குள் மட்டும் தான் அனுமதி என்பதால், நாகர்கோவிலில் இருந்து கேரள எல்லையான களியக்காவிளை, கொல்லங்கோடு, பனச்சமூடு வரையிலும், மறுபுறம் அஞ்சுகிராமம் மற்றும் காவல்கிணறு சந்திப்பு வரையிலும் பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் 2 வது நாளாக பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. பனச்சமூடு, ெகால்லங்கோடு, களியக்காவிளை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 273 பஸ்கள் இயக்கப்பட்டன. முதல்நாளில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1ம் தேதி ரூ.9 லட்சமும், 2ம் தேதி ரூ.12 லட்சமும் வசூல் ஆகியுள்ளது. நேற்று மொத்தம் 278 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் மாவட்டத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் 69 அடங்கும். மேலும் வருகிற 7ம் தேதி முதல் புறநகர் பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் புறநகர் பஸ்கள் இயக்க நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகம் ஆயத்தம் ஆகிய வருகின்றது. இதுபோல் குமரி மாவட்டத்தில் இருந்து தொலைதூரம் இயக்கப்படும் அரசு விரைவுப்போக்குவரத்து கழக பஸ்களும் சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பணிமனைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மீனாட்சிபுரம் பணிமனையிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அனைத்து பஸ்களையும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மெக்கானிக் படுகாயம்
அரசு பஸ்கள் சுமார் 60 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பல பஸ்களின் பேட்டரிகள் செயல்பட வில்லை. இதனால் புறநகர் செல்லும் பஸ்களில் உள்ள பேட்டரிகளை போட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திங்கள்நகர் பணிமனையில் ஒரு பஸ்சில் பேட்டரி செயல்பட வில்லை. இதனை தொடர்ந்து மற்றொரு பஸ்சில் உள்ள பேட்டரி மூலம் சார்ஜ் ஏற்றப்பட்டு பஸ்சை இயக்க முயற்சி நடந்தது. இந்த பணியில் திக்கணங்கோடை சேர்ந்த மெக்கானிக் சூசைமிக்கேல்(57) என்பவர் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சூசைமிக்கேல் மீது ஒரு பஸ் ஏறி இறங்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Tags : State Transport Corporation , State, Transport ,Corporation , ready ,operate ,suburban, buses
× RELATED திருச்சியில் இருந்து ராமேஸ்வரம்...