×

‘அரோகரா’ பரவசம் அதிகரிப்பு பழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’

பழநி: பழநி மலைக்கோயிலில் வரும் 6ம் தேதி வரை இலவச தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் கடந்த மார்ச் 19ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 160 நாட்களுக்கு பிறகு தமிழக அரசு அறிவித்த செப்டம்பர் மாத தளர்வுகளில் கோயில்களை திறக்க அனுமதி அளித்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை பழநி கோயிலில் பக்தர்கள் கூட்டம் சராசரியாக இருந்தது. இந்நிலையில் இன்று துவங்கி வரும் 6ம் தேதி வரை இலவச தரிசன முன்பதிவு முழுவதும் புக் செய்யப்பட்டு ஹவுஸ் புல்லாகி விட்டது. ரூ.100 கட்டண தரிசனத்தில் சில டிக்கெட்டுகள் புக் செய்ய வாய்ப்புள்ள. தற்போது நாள் ஒன்றிற்கு சுமார் 1,500 பேர் முதல் 2000 பேர் வரை மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடிகிறது. எனவே, கோயில் நிர்வாகம் நாள்தோறும் கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



Tags : Arogara ,Darshan 'Housepool ,Palani Temple ,Free Darshan 'Housepool , ‘Arogara’ ,ecstasy, Palani ,temple ,‘Housepool’
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்