×

பிரான்சில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி

பாரிஸ்: பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குப் பிறகு பிரான்சில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும். பிரான்சில் இதுவரை 3,00,181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,706 பேர் பலியாகினர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

ஊரடங்கு காலக்கட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்சில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால் கொரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளை தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.



Tags : outbreak ,Corona ,France ,Paris , Paris, France, Corona
× RELATED ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு...