×

நண்பகல் 1 மணியில் இருந்து எஸ்.இ.டி.சி. பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்!: முதல்கட்டமாக 524 பேருந்துகளை இயக்க திட்டம்..போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!

சென்னை: பிற்பகல் 1 மணியில் இருந்து எஸ்.இ.டி.சி. பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கவிருக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு பேருந்து சேவை தற்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதியிலிருந்து சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 7ம் தேதியிலிருந்து எஸ்.இ.டி.சி. பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான முன்பதிவு என்பது இன்று பிற்பகல் 1 மணியில் இருந்து தொடங்கவிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் முதல்கட்டமாக 524 எஸ்.இ.டி.சி. பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதாவது 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாக எஸ்.இ.டி.சி. பேருந்தின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1082 பேருந்துகள் எஸ்.இ.டி.சி. - யில் செயல்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளை அதிகரிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பேருந்துக்கு 26 இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் 60 சதவீதம் அளவிற்கு பயணிகளை ஏற்றி செல்லலாம் என்று எஸ்.இ.டி.சி.-யின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கவுன்ட்டர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய பேருந்துகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் பெரும்பாலானோர் இணையதளத்தில் பேருந்து சேவையை பெறலாம் என்றும் எஸ்.இ.டி.சி. அறிவுரை வழங்கியிருக்கிறது.  முன்பதிவு செய்யாமலும் பேருந்தில் பயணிக்க முடியும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.


Tags : phase ,Booking ,Transport Department ,SETC , 1 p.m., S.E.T.C. Bus, booking, start
× RELATED நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88...