×

இந்தியா - சீனா எல்லை பிரச்சனையை ராஜதந்திரத்தின் மூலம் தீர்க்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்..!!

டெல்லி: இந்தியா - சீனா இடையேயான எல்லை விவகாரம் ராஜ்ஜிய அணுகுமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காஸ்மீரில் லடாக்கில் உள்ள எல்லை பகுதியில் சீன படைகள் தொடர்ந்து அத்துமீறி வருகின்றன. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையேயான மோதலில் 20 இந்திய வீரர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து. இதில் சீன வீரர்கள் பலரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் மொபைல் செயலிகளை இந்தியாவிற்குள் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது. முன்னதாக சீனா மீண்டும் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றதாகவும், அதனை இந்தியா முறியடித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.  

இந்நிலையில் இந்தியா - சீனா இடையேயான எல்லை விவகாரம் ராஜ்ஜிய அணுகுமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெய்சங்கர், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனையை ராஜதந்திரத்தின் மூலம் தீர்க்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் ஒரு முடிவுக்கு வருவதை உலகமே எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சீனாவுடன் எங்களுக்கு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் உள்ளன. ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் இரு தரப்பினராலும் கவனமாக கவனிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், லடாக் விவகாரத்தில் இந்தியா - சீனா இடையேயான ஒப்பந்தத்தின்படி இந்தியா செயல்பட்டு வருவதாகவும், எல்லை விவகாரத்தால் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு உண்மையாக பாதிக்கப்படும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.


Tags : Jaisankar ,China ,India , India, China, border issue, diplomacy, Foreign Minister Jaisankar
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...