×

கண்ணுக்கு தெரியாத எதிரியின் ஆவேச தாக்குதல்; உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 8.66 லட்சத்தை தாண்டியது

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 8,72,508 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 26,458,122 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18,651,027 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 60,907 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியின் ஆவேச தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  2.64  கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  1.86 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  8.72 லட்சமாக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டிவிட்டது. அமெரிக்காவில் 63.35 லட்சம், பிரேசிலில் 40.46 லட்சம், ரஷ்யாவில் 10.09 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 1.91 லட்சம், பிரேசிலில் 1.24 லட்சம், ரஷ்யாவில் 17,528 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

Tags : attack ,corona deaths , World, corona, mortality
× RELATED சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு கீழ் குறைந்தது