×

அரசு பள்ளி கட்டிட பூமி பூஜை

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பி.எம்.நரசிம்மன் பங்கேற்று பூமி பூஜை செய்து கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய குழு தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன், பேரூர் செயலாளர் சண்முகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜெயவேலு, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ஜி.பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துராமன், ரவி, புஷ்பாபாஸ்கர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் உமாபதி, வெங்கட்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.  


Tags : Government , Government school, building, Bhoomi Puja
× RELATED கேரள அரசு பஸ்களில் கட்டணத்தை குறைக்க முடிவு