×

இரும்பு கடையில் காப்பர் திருட்டு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன் (58) அதே பகுதியில் பழைய மின் மோட்டார் காப்பர் வயர்களை பிரித்து விற்பனை செய்யும் குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று அதிகாலை 6 மணிக்கு குடோனை வந்த பார்த்தபோது, கேட் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்தியசீலன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது பழைய மின் மோட்டார்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சுமார் 750 கிலோ காப்பர் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து சத்தியசீலன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : iron shop , Iron shop, copper, theft
× RELATED இரும்புக் கடையில் பணம் கொள்ளை