×

சொந்த வயலில் எலிக்கு வைத்த மின் வேலியில் சிக்கி விவசாய தம்பதி பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா கிருஷ்ணாபுரம் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (62). இவரது மனைவி மலர்கொடி(54). விவசாயிகள். இவர்கள் அன்னமங்கலம் சாலையில் உள்ள சொந்த வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு சாகுபடி செய்து வந்தனர். வயலில் காட்டுப்பன்றிகள், எலிகள் தொல்லைகளில் இருந்து பயிர்களை காக்க வயலை சுற்றி இரவில் மட்டும் மின்கம்பி வேலி அமைத்து, பகலில் அதை சுருட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை மின்நிறுத்தம் செய்யப்பட்டிருந்ததால் மின்கம்பியை பெரியசாமி சுருட்டிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சப்ளை வந்ததால் மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தார். அவரை காப்பாற்ற மலர்கொடி தொட்டபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.


Tags : field , Own field, rat electric fence, trapped farm couple, killed
× RELATED மயானம் செல்ல சாலை வசதி இல்லை: வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்