×

போதை பொருள் புழக்க விசாரணை நடிகை ராகினி திவேதிக்கு போலீஸ் நோட்டீஸ்

பெங்களூரு: கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது தொடர்பாக விசாரணை நடத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கன்னட திரைப்பட முன்னணி நடிகையான ராகினி திவேதியின் நண்பர் ரவி சங்கர் என்பவரை கைது செய்தனர். அவர், ஜெயநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தந்தை இறந்த பின்னர் இந்த பணி அவருக்கு வழங்கப்பட்டது. நடிகை ராகினி திவேதியுடன் இவருக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இருவரும் அடிக்கடி திரையுலக நண்பர்களின் விருந்துகளில் கலந்து கொள்வது வழக்கம். அப்போது ரவிசங்கர் போதை பொருட்களை அதிகளவு பயன்படுத்தியுள்ளார். உடன் ராகினியும் இருந்துள்ளார். இந்த போட்டோ, ரவி சங்கர் செல்போனில் உள்ளது.இது குறித்து விளக்கம் அளிக்கும்படி ராகினிக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். திங்கட்கிழமை ஆஜராவதாக அவர் கூறியதை ஏற்க மறுத்த போலீசார் இன்றே ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்தனர்.

* போதை பொருள் அல்ல: கஞ்சா ஒரு மருந்து: நடிகர் ராகேஷ் விளக்கம்
‘கஞ்சாவை சிலர் போதை பொருள் என்று கூறி வருகிறார்கள். உண்மையில் அது போதை பொருள் அல்ல மருந்து,’ என்று கன்னட திரையுலகின் இளம் நடிகர் ராகேஷ் அடிகா தெரிவித்தார். கர்நாடகாவில் போதை மாபியா பிரச்னை புயலை கிளப்பியுள்ளது. கன்னட திரையுலகில் உள்ள பல கலைஞர்கள் போதை மாபியா கும்பலுடன் தொடர்பில் உள்ளதாக பத்திரிக்கையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான இந்திரஜித் லங்கேஷ் எழுப்பியுள்ள புகார் கன்னட திரையுலகை ஆட்டம் காண செய்துள்ளது. இந்நிலையில் கஞ்சா போதை பொருள் அல்ல, மருந்து என்று புது விளக்கத்தை இளம் நடிகர் ராகேஷ் அடிகா விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சியில் அவர் அளித்துள்ள பேட்டியில், கஞ்சா குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. இதை போக்க வேண்டும். கஞ்சா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக அங்கிகரிக்க வேண்டும். நான் நடிகனாக இல்லாமல் சாமானிய குடிமகனாக சொல்வது என்னவெனில் கஞ்சா என்பது ஒரு மூலிகை செடி. அதற்கு பல ஆண்டுகால வரலாறு உள்ளது. முனிவர்கள், சாதுக்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள். இது போதை பொருள் அல்ல. மருந்து. கஞ்சாவின் பலன்கள் குறித்து ஆயுஸ்மான் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. வளர்ந்த நாடான அமெரிக்கா அரசாங்கம் கஞ்சாவை சட்டப்பூர்வமாக அங்கிகரித்துள்ளது. பல வழிகளில் அமெரிக்காவை பின்பற்றும் நமது நாடு ஏன் கஞ்சாவை அங்கீகரிக்க கூடாது,’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

* மாதம் ரூ.1 லட்சம் கொடுத்து ராகினியுடன் ‘லிவிங் டுகெதர்’
ராகினியின் நண்பரான ரவி சங்கரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர் ராகினியுடன் நெருக்கமாக இருந்தது உறுதியானது. இதற்காக மாதம் ரூ.1 லட்சம் வரை அவருக்கு செலவு செய்துள்ளார். ஆர்.டி.ஓ  அலுவலகத்தில் பணியாற்றி வரும் ரவி சங்கருக்கு மாதம் ரூ.35 ஆயிரம் மட்டுமே சம்பளம். இருப்பினும் மாதம் ரூ.1 லட்சம் செலவு செய்யும் அளவிற்கு பணம் எங்கிருந்து கிடைத்தது என்று கேள்வி எழுந்துள்ளது.

* எனக்கு கொரோனா: சஞ்சனா எஸ்கேப்
கன்னட சினிமா தண்டுபாளையா 2வது பாகத்தில் நடித்தவர் முன்னணி நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி. போதை பொருள் விவகாரத்தில் இவரது பெயரும் அடிபட்டது. அதற்கு காரணம் ராகினியின் நண்பர் ரவி சங்கர் சி.சி.பியில் அளித்த வாக்குமூலம். அவரது வாக்குமூலத்தை வைத்து சஞ்சனாவின் ஆண் நண்பர் ராகுலை போலீசார் கைது செய்தனர். அதில் அவர் சஞ்சனாவுடன் பல்வேறு மதுபான விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோ ஆதாரங்கள் கிடைத்தது. இதை வைத்து சஞ்சனாவை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் தனக்கு கொரோனா இருப்பதாக அவர் கூறியதால் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

Tags : Ragini Dwivedi ,actress ,Ragini Dwivedi Police , Drugs, circulation investigation, actress Ragini Dwivedi, police notice
× RELATED ரூ.3.16 கோடி நில மோசடி வழக்கு பாஜ...