×

இந்தியா - அமெரிக்கா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: இந்தியா - அமெரிக்கா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து உள்ளது. மிக விரைவாக மருத்துவ வசதிகளை உருவாக்கியதால் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க - இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

2020ஆம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் தொடக்கத்தில் நாம் நினைத்தோமா? என்று மோடி வினவியுள்ளார். நமது பொருளாதார அமைப்பு, சுகாதார அமைப்பை கொரோனா சோதித்து பார்க்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். தற்போதைய சூழல் புதிய மனநிலையையும், வளர்ச்சிக்கான அணுகுமுறையையும் எதிர்நோக்குகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என அமெரிக்க தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தாண்டு மட்டும் 20 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வீட்டுவசதி திட்டம், டிஜிட்டல் மருத்துவ வசதிகளை இந்தியா உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளால் நாளை வளம் மிக்கதாக மாறும். தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும். கைப்பேசி, மின்சாதனப் பொருட்கள், மருத்துவ சாதனங்களை இந்தியாவில் தயாரிக்க பெரிய வாய்ப்பு உள்ளது.



Tags : Narendra Modi ,speech ,India ,summit ,US , India, USA, Modi
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...