×

தி.மு.க.வின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகனுக்கும், பொருளார் டி.ஆர்.பாலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து

சென்னை: தி.மு.க.வின் பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்ரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இரு பதவிகளுக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.

இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் இன்று பிற்பகலில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அண்ணா அறிவாலயத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்த துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வழங்கினார்.  தேர்வு செய்யப்பட்ட இருவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என கூறினார். வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Rajinikanth ,Paul ,Duraimurugan ,election ,General Secretary ,DMK ,DR ,treasurer , Actor Rajinikanth ,congratulates ,DMK general secretary Duraimurugan, treasurer DR Paul, Twitter
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...