×

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு உள்ளூர் தேர்தலில் போட்டியிடுவேன் என சபதம்

இத்தாலி: இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உள்ளூர் தேர்தலில் போட்டியிடுவேன் என சபதம் எடுத்துள்ளார். இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி (வயது 83).  ஊடக அதிபரான அவர் இந்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூர் தேர்தல்களில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள மும்முரமுடன் செயல்பட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுபற்றி வீடியோ ஒன்றின் வழியே தனது ஆதரவாளர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள செய்தியில், துரதிர்ஷ்டவசம் ஆக எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஆனாலும், தொடர்ந்து போராடுவேன் என சபதம் எடுத்துள்ளார்.  அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானவுடன் மிலன் நகரின் வடக்கே ஆர்கோர் நகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.  இதனை அவரது பணியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Tags : Silvio Berlusconi ,Italian ,election , Former Italian,Prime Minister Silvio Berlusconi,vowed , local election
× RELATED டிவிட்டரில் ஆவி பறந்த இட்லி சண்டை:...