பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை 4வது நாளாக சீராக உள்ளது; திங்கட்கிழமைக்குள் நல்ல செய்தி வரும்: மகன் சரண் தகவல்

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை 4வது நாளாக சீராக உள்ளது என அவரது மகன் சரண் தகவல் தெரிவித்துள்ளார். இந்த வார இறுதி அல்லது திங்கட்கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என நான் காத்திருக்கிறேன் எனவும் எஸ்.பி. சரண் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உடல்நிலை சீராக முன்னேற்றம் அடைந்து வருகிறது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்நோக்கு மருத்துவர் குழு எஸ்.பி.பி.யின் உடல்நிலையை கண்காணித்து வருகிறது. சுயநினைவோடு இருக்கும் எஸ்.பி.பி. மருத்துவ சிகிச்சைக்கு தொடர்ந்து ஒத்துழைக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எஸ்.பி.பி.க்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது எனவும் கூறினார். பிறா் பேசுவதை உணா்ந்து பதிலளிக்கிறார்.

பிசியோதரபி சிகிச்சைகளுக்கு எஸ்.பி.பி உடல்நிலை நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அண்மையில் மருத்துவமனை அறிக்கை அளித்திருந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை 4-வது நாளாக சீராக உள்ளது எனவும், அவரது உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் எனவும் தற்போது கூறினார். ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து செயற்கை சுவாச முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அவரது உடல்நிலை மெதுவாகத்தான் குணமடையும். உங்களுடைய வேண்டுதல்கள் நிச்சயம் உதவும். உங்களுடைய அன்புக்கு நன்றி என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>