×

'சென்னை-சேலம் 8 வழிசாலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்' - தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.-க்கள் உறுதி!!!

சேலம்:  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் 8 வழிச்சாலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று தி.மு.க மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். சேலம் மாவட்டம் குள்ளம்பட்டியில், 8 வழிச்சாலை பாதிப்பு குறித்து விவசாயிகளுடன் தி.மு.க., மற்றும் காங்கிரசை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து கூட்டத்தில்,  சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே உள்ள 3 நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி பயன்படுத்த வலியுறுத்தியும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 வழிச்சாலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்போவதாக உறுதி அளித்தனர்.

8 வழிச்சாலையால் விளைநிலங்கள், இயற்கை வளங்கள் அளிக்கப்படும் என்பதால் இதற்கு விவசாயிகள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 வழிச்சாலையை மாற்று வழியில் கொண்டுசெல்ல வலியுறுத்தோம் என தெரிவித்துள்ளனர்.

Tags : Congress ,Parliament ,Chennai-Saleem 8 ,DMK ,MPs , Parliament ,Chennai-Saleem, 8 way route,DMK, Congress ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹூவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு