×

இந்தியா முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 32,563 கூலித்தொழிலாளர்கள் தற்கொலை: என்சிஆர்பி தகவல்

டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் என 42,480 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.  உயிரிழந்தவர்களில் 10,281 பேர் விவசாயிகள் என்றும் 32,563 பேர் கூலித் தொழிலாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,39,123 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் 7.4 சதவீதம் விவசாயிகள் ஆகும். மழையின்மை, விவசாயக் கடன் என பல பிரச்சனைகளுக்காக விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.  

விவசாயிகள் என 5,957 பேர் தற்கொலை செய்ததில், 5,563 பேர் ஆண்கள், 394 பேர் பெண்கள். 4,324 விவசாய கூலித் தொழிலாளர்கள் தற்கொலையில் 3,749 பேர் ஆண்கள், 575 பேர் பெண்கள் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39.2 சதவீதம் விவசாயிகள் தற்கொலைகள் செய்துள்ளனர். அடுத்ததாக கர்நாடகாவில் 19.4 சதவீதம், ஆந்திராவில் 10 சதவீதம், மத்தியப் பிரதேசம் 5.3 சதவீதம், சத்தீஸ்கர் தெலங்கானாவில் 4.9 சதவீதம் தற்கொலைகள் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags : mercenaries ,NCRP ,suicide ,India , India, Mercenaries, Suicide, NCRP
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை...