×

கொரோனாவை ஒழிக்க கங்கை நீரால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் அருள்வாக்கு சித்தர் லட்சுமியம்மா : சுனாமி, கோவிட் நோய் குறித்து முன்கூட்டியே எச்சரித்தவர்!!

ராமேஸ்வரம் : உலகை தாக்கி வரும் கொடிய நோயான கொரோனா இனி மேல் படிப்படியாக ஒழிந்துவிடும் என்று ராமேஸ்வரத்தில் உள்ள ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம லிங்கத்திற்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்த பின் அருள்வாக்கு சித்தர் லட்சுமி அம்மா தெரிவித்தார்.

யார் அந்த அருள்வாக்கு சித்தர் ?

சிவகங்கை மாவட்டம் கீழாய்க்குடி ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் ஆத்ம அருள்வாக்கு சித்தர் என்றழைக்கும் லட்சுமி அம்மா. இவர் சிறு வயதிலேயே சிவபுராணம் கற்று, இமயமலையில் 25 ஆண்டுகளாகவே கடும் தவம் இருந்து, மகேஸ்வரரின் அருளைப் பெற்று, ஆன்மாக்களுடன் பேசும் சக்தி பெற்றவர். ஒருவரின் முக்காலத்தையும் நேரடியாக சொல்லும் ஆற்றல் படைத்தவர். இவரிடம் அருள்வாக்கு பெற்றவர் பலர் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

சுனாமி, கோவிட் நோய் குறித்து முன்கூட்டியே எச்சரித்தவர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுனாமி குறித்து லட்சுமி அம்மா முன்கூட்டியே எச்சரித்து இருந்தார். இதே போல் கடந்த செப்டம்பரில் ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், வரும் 2020ம் ஆண்டு துவக்கத்தில் உலகம் முழுவதும் கொடிய நோயால் அதிகளவு உயிரிழப்பு ஏற்படும்..முன்னெச்சரிக்கை அவசியம், என கூறி இருக்கிறார். எனினும் இவரது எச்சரிக்கையை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.

மா முனிவர்கள் யோசனை

தற்போது லட்சுமி அம்மா சொன்னபடி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் அதிகளவு உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. கொரோனாவால் மக்கள் உயிரிழந்ததை பார்த்ததும், ஐயோ நம் மக்கள் கொடிய நோயால் செத்து மடிகிறார்களே, என லட்சுமி அம்மா கதறி அழுதார். இதற்கு தீர்வு காண எண்ணினார். இதைத் தொடர்பில் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் உணவு, தண்ணீர் அருந்தாமல் லட்சுமி அம்மா தொடர்ந்து 9 நாட்கள் கடும் தவம் இருந்தார். அப்போது அகஸ்தியர், பதஞ்சலி ஆகிய மா முனிவர்கள் லட்சுமி அம்மாவின் கண் முன் தோன்றி, உலகை அச்சுறுத்தும் கொடிய நோயில் இருந்து மக்கள் விடுபட வேண்டுமானால் ஹரித்துவாரில் கங்கை, யமுனை, சரஸ்வதி, பிரம்மபுத்ரா ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள நீரை கமண்டலத்தில் எடுத்து கங்கா கலசத்துடன் வந்து அதனை உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் எந்த கொடிய விஷத்தையும் கிருமியையும் ஒழிக்கும் வல்லமை உள்ள திருநீலகண்டேஸ்வரர் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்ய வேண்டும்.

பின்னர் அந்த நீரை உத்தரகாண்ட், கைலாயம்,பசுபதிநாத், அமர்நாத், உஜ்ஜன் மஹால், கேதர்நாத், பத்ரிநாத், கங்கா சாகர் கபில முனிவர் கோவில்.நேபாளம் பனிக்குகை, காசி வழியாக சுமார் 3000கிமீ தூரம் உள்ள ராமேஸ்வரத்திற்கு கொண்டு வர வேண்டும். இங்குள்ள ஸ்படிக லிங்கத்துக்கோ அல்லது தனுஷ்கோடியில் உள்ள, ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கத்துக்கோ பிரமம் முகூர்த்தத்தில், அபிஷேகம் செய்தால், இவ்வுலகை அச்சுறுத்தும் கொரோனா என்கிற கொடிய நோய் தாக்குதலில் இருந்து இந்தியாவை காப்பாற்ற முடியும், என்று கூறிவிட்டு மறைந்தனர்.

ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம லிங்கத்திற்கு கங்கை நீரால் அபிஷேகம்

அதன்படி, லட்சுமி அம்மா புனித நீரை கமண்டலத்தில் எடுத்து வந்து, திருநீலகண்டேஸ்வரர் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து, சேர்ந்தார். பின்னர், புனித நீருடன் 5 நாட்கள் பாத யாத்திரையாக ரமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமியை வழிப்பட்டார். பின்னர் கடலில் ஒரே காலில் உணவோ, தண்ணீரோ இல்லாமல் தொடர்ந்து 9 நாட்கள் தவம் இருந்தார். அதைத் தொடர்ந்து தனுஷ் கோடியில் உள்ள ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கத்திற்கு பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் செய்தார். பின்னர் பேசும்போது, திட்டமிட்டபடி, கங்கை நீரால் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்துள்ளேன். இனி உலகை தாக்கியுள்ள கொரோனா எனும் கொடிய நோய் படிப்படியாக ஒழிந்துவிடும். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள், என்றார்.     


Tags : Siddharth Lakshmiamma ,Ganga ,Tsunami ,Govt , Corona, Eliminate, Ganga, Lingam, Abhishekam, Siddharth Lakshmiamma
× RELATED ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நிலம் மீட்பு