ஆப்கானிஸ்தானின் பச்சேரகம் மாவட்டத்தில் கண்ணிவெடி தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 55 வயதான தந்தையும் , 19 வயதான மகனும் உள்ளனர். பச்சேரகம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் கண்ணிவெடியை புதைத்து வைத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது திடீரென கண்ணிவெடி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கண்ணிவெடி தாக்குதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு தலிபான் உள்ளிட்ட எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

Related Stories:

>