×

முதல் நாள் வசூல் 9 லட்சம் குமரியில் பஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: 2 வது நாள் கூடுதல் பயணிகள் வருகை

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் நேற்று 2 வது நாள் கூடுதலாக பயணிகள், பஸ்களில் பயணம் செய்தனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ்கள் இயக்கம், நேற்று முன் தினம் முதல் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக மாவட்டங்களுக்குள் மட்டும் பஸ் போக்குவரத்து நடக்கிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 520 டவுன் பஸ்களில், முதல் நாளான நேற்று முன் தினம் 253 பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் நாள் பயணிகளின் கூட்டம் மிக குறைவாகவே இருந்தன. பயணிகள் முக கவசம் அணிந்து ெகாள்ளுமாறு டிரைவர், கண்டக்டர்கள் வலியுறுத்தினர். டிரைவர், கண்டக்டர்களும் முக கவசம் அணிந்து இருந்தனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனையும் நடத்தப்பட்டது.

மாவட்டங்களுக்குள் மட்டும் தான் அனுமதி என்பதால், நாகர்கோவிலில் இருந்து கேரள எல்லையான களியக்காவிளை, கொல்லங்கோடு, பனச்சமூடு வரையிலும், மறுபுறம் அஞ்சுகிராமம் மற்றும் காவல்கிணறு சந்திப்பு வரையிலும் பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் 60 நாட்களுக்கு பின் மீண்டும் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியதால் இனி இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 9 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு நேர பஸ்கள்,  ஸ்டே பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.நேற்று 2 வது நாளாக பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. பனச்சமூடு, ெகால்லங்கோடு, களியக்காவிளை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

நேற்று கூடுதலாக 20 பஸ்கள் இயங்கியதால், மொத்த பஸ்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்தது. முதல் நாள் ரூ.9 லட்சம் வசூல் ஆகி உள்ளது. ஒரு பஸ்சுக்கு, சராசரியாக ரூ.3500 கிடைத்துள்ளது. நேற்று 2 வது நாள் காலை பயணிகள் கூட்டம் சற்று அதிகரித்தது. மாலையிலும் சில பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டனர். ஒரு சிலரை தவிர பெரும்பாலான பயணிகள் முக கவசம் அணிந்திருந்தனர்.


Tags : Kumari , First ,collection, 9 lakh, Kumari, bus
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...