×

திருப்பதி ஏழுமலையான் கோவில் கணக்கு மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்!

ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோவில் கணக்கு மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்வதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்கள் மற்றும் நகைகள் அனைத்தையும் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேவேளையில், ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் காலத்தில் இருந்து தற்போது வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள் மற்றும் பணப்பரிமாற்றம் குறித்து தணிக்கை செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து கடந்த 5 ஆண்டு கால திருப்பதி கோவில் கணக்கு மற்றும் எதிர்கால கணக்குகளை தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்ய உத்தரவிடக்கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

கோவிலுக்கு சொந்தமான நகைகள், சொத்துக்கள் மற்றும் வரவு -செலவு கணக்கை அவர் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையில் , திருப்பதி தேவஸ்தானம் 202 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதில், 5 ஆண்டு கால திருப்பதி கோயில் சொத்துகள் மற்றும் வரவு–செலவு கணக்கை தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், கோயிலின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆந்திர அரசு, மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரிடம் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், ஏழுமலையானுக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் வரவு-செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் என்ற சுப்ரமணியன் சுவாமியின் கோரிக்கை நிறைவேற்றப்பட இருப்பதால், வேலை முடிந்தது என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



Tags : audit ,Devasthanam ,Tirupati Ezhumalayan , Tirupati, Ezhumalayan Temple, Accounting, Property, Audit, Devasthanam, Subramania Swamy
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...