×

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சென்னை மீனவர்கள் 10 பேரின் கதி என்ன? - மீனவர்களை மீட்க அரசு மெத்தனம் காட்டுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!!!

சென்னை:  ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற சென்னை மீனவர்கள் 10 பேரின் கதி என்ன ஆனது? என்பது இதுவரை தெரியவில்லை. 48 நாட்களாகியும் வீடு திரும்பாததால், காசிமேடு, திருயொற்றியூர் மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், மீனவர்களை மீட்க அரசு துரித நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது. இதனால் ஹெலிகாப்டர், விமானம், கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவற்றை  உபயோகப்படுத்த உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தென்னிந்திய மீனவ நல சங்க நிர்வாகி பாரதி அவர்கள் பேசுகையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசிடம் புகார் அளித்திருக்கின்றனர்.

அதற்கு பதிலளித்த அரசு அதிகாரிகள், நாங்கள் தீவிரமாக தேடி வருவதாக கடலோர காவல் படையினரிடம் கூறியுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 48 நாட்கள் ஆன பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லாத சூழல் நிலவி வருவதாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், இன்றைய அளவில், விஞ்ஞானத்திலேயும், தகவல் தொழிற்நுப்பதிலேயும் உலக நாடுகளிடையே போட்டியிடக்கூடிய வகையில், இந்தியா முன்னேறி உள்ளதாக நாம் கூறுகிறோம். ஆனால் அண்மையில் காணாமல் போன 10 மீனவர்களை 48 நாட்களாகியும் காப்பாற்ற முடியவில்லை என்பது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கப்பல்கள் மூலம் தேடி வருவதாக கூறுவதை விடுத்து, இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அவர். இதற்கிடையில், இதுதொடர்பாக தமிழக முதல்வர், மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக மீனவ நலச்சங்க நிர்வாகி கூறியுள்ளார்.

வழக்கறிஞர் லிங்கம் அவர்கள் கூறுகையில், அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஏதும் திருப்தியளிப்பதாக இல்லை என கூறியுள்ளார். மேலும் மீனவர்களின் உயிர்களை அரசு அலட்சியப்படுத்துவதாகவும் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். அகில இந்திய மீனவர் சங்கம் நாஞ்சில் ரவி அவர்கள் கூறுகையில், சமீப காலமாக கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் காணமால் போவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் மீன் வளத்துறையிடம் மீனவர்களை மீட்பதற்கான எந்த வித நவீன கருவிகளும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து இனி வரும் காலங்களிலாவது மீன் பிடிக்க செல்லும் மீனவரிகளின் உயிர்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், பி.எஸ்.என்.எல் கொண்டுவந்துள்ள தகவல் தொடர்பு சாதனம் (சாட்லைட் போன்களை) வழங்க தயாராக உள்ளன. ஆனால் அதனை அரசு பெற்று தருவதில் அலட்சியம் காட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது குறைந்த அலைவரிசை கொண்ட தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களையே தங்களுக்கு கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தென்னிந்திய மீனவர் பேரவை பாலையன் அவர்கள் கூறுகையில், மீனவர்களின் வாழ்க்கை என்பது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார். 48 நாட்களாகியும் மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதனால் மீனவர்களின் உறவினர்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து மீனவர்களை எளிய முறையில் காப்பாற்றும் வகையில், புதிய நவீன தொழிற்நுட்பம் கொண்ட படகு ஒன்றினை கண்டுபிடிக்க வேண்டுமென்று அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : fishermen ,Chennai ,government ,Relatives , Chennai fishermen ,sea fishing, Relatives ,government , rescue fishermen ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...